Home / Videos / Flattened Rice Upma / Poha Upma

585
0
0.0(0)
0

Flattened Rice Upma / Poha Upma

Jan-08-2019
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Flattened Rice Upma / Poha Upma RECIPE

அவல் உப்புமா எளிதில் செய்யக்கூடிய காலை உணவு. வட இந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இந்த அவல் உப்புமா.

Recipe Tags

  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. சிகப்பு அல்லது வெள்ளை அவல் - 1 கப்
  2. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  3. உருளைக்கிழங்கு -1 பொடியாக நறுக்கியது
  4. பச்சை பட்டாணி -3 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது
  6. கருவேப்பிலை -சிறிதளவு
  7. மல்லி இலை - சிறிதளவு
  8. கடுகு -1 தேக்கரண்டி
  9. சீரகம் -1/2 தேக்கரண்டி
  10. வேர்க்கடலை -2 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  12. எலுமிச்சைசாறு்-1 தேக்கரண்டி
  13. உப்பு - தேவையான அளவு
  14. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. அவல் உப்புமா செய்யத்தேவையான பொருட்கள் :
  2. பவுலில் 1கப் அவலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  3. இரண்டுமுறை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவிக்கொள்ளவும்.
  4. பின்பு வடிகட்டியினால் தண்ணீர் இல்லாமல் நன்கு வடித்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு பொறியவிடவும்.
  6. இப்பொழுது 2 தேக்கரண்டி அளவு வேர்க்கடலையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. பொடியாக நறிக்கிய வெங்காயம் ஒன்று சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 2, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  9. இப்பொழுது 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  10. இதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு ஒன்று, 3 தேக்கரண்டி பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.
  11. நன்கு வதக்கி மூடியால் மூடி வேகவிடவும்.
  12. நன்கு வெந்ததும் தண்ணீர் வடித்து வைத்துள்ள அவலை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  13. உப்பு தேவை எனில் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும் .
  14. இப்பொழுது 1 தேக்கரண்டி அளவு எலுமிச்சைசாறு சேர்த்து நன்கு கிளறவும்.
  15. இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
  16. சுவையான எளிதில் செய்யக்கூடிய அவல் உப்புமா தயார்.
  17. சூடான அவல் உப்புமா தயார்.
  18. அவல் உப்புமா

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE