பிரியாணிக்கு::: அரிசியை கழுவி,30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.காய்ந்தமிளகாய், காஷ்மீரி மிளகாய் இவற்றை வெந்நீரில் ஊறவைத்தபின் மைய அரைக்கவும்
குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சிறிது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின் 1 டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும்.
பின் பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் ,இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.
சுத்தம் செய்த மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அரைத்த மிளகாய் விழுதினை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மீதமுள்ள வெங்காயம், தக்காளி,தயிர் மற்றும் 1 கப் நீர்,உப்பு சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் நீர்,உப்பு சேர்த்து கொதிக்கவைத்து அரிசியியை சேர்த்து 50% வரை வேகவைத்து வடிக்கவும்
ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து புதினா,கொத்தமல்லியை சேர்த்து கலந்து தம் போடும் பாத்திரத்தில் மாற்றவும்.
அதன்மேல் வடித்த சாதம் சேர்த்து கலக்கவும்.
முற்சூடு செய்த அவனில் 190 டிகிரி செல்சியஸ் சில் 20 நிமிடம் வைத்து எடுத்தால் பிரியாணி ரெடி!!
ராய்த்தா செய்ய:: நறுக்கிய வெங்காயத்தை உப்பு மற்றும் தயிர் சேர்த்து கலக்கவும்.
அல்வா செய்ய ::: கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.
அதே நெய்யில் கோதுமையை சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும்.
பின் வேகவைத்த பாசிபருப்பினை மசித்து சேர்த்து கலக்கவும்.
பின் சர்க்கரை சேர்க்கவும்.
பின் அல்வா கெட்டியா வரும்போது கேசரிகலர்,ஏலக்காய்பொடி சேர்க்கவும்.
கடைசியாக முந்திரி,மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுக்கா செய்ய ::: சுத்தம் செய்த மட்டனில் நசுக்கிய இஞ்சிபூண்டு, 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள், கரம்மசாலா, சிறிது நீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேகவைக்கவும்.
கடாயில் நெய்+எண்ணெய் ஊற்றி சோம்பு,கறிவேப்பிலை ,காய்ந்தமிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் தக்காளி,தூள்வகைகள் சேர்த்து வதக்கி உப்பு,வேகவைத்த மட்டன் சேர்த்து கிளறவும்
நன்கு சுருள வரும் போது மிளகுதூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
வாழையிலையில் பிரியாணி,சுக்கா,ராய்த்தா, அல்வா சேர்த்து பரிமாறவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க