வீடு / சமையல் குறிப்பு / சீஸி காளான் ப்ரை

Photo of Cheesy Mushroom Fry by Ayesha Ziana at BetterButter
1111
3
0.0(0)
0

சீஸி காளான் ப்ரை

Nov-17-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீஸி காளான் ப்ரை செய்முறை பற்றி

சீஸ் ஸ்டப்பிங் வைத்து செய்த காளான் ப்ரை.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காளான் 10
  2. டூத்பிக் 10
  3. கோதுமைபிரட் க்ரம்ப்ஸ் 1 கப் அல்லது தேவைக்கு
  4. பொரிக்க எண்ணெய்
  5. ஸ்டப்பிங் செய்ய: துருவிய செடார் சீஸ் 1/2 கப்
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கு
  9. மாவுக்கு: சோள மாவு 1/2 கப்
  10. கோதுமை மாவு 2 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  12. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  13. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒரு பவுலில் கலந்து வைக்கவும்.
  2. மாவு செய்யக் கொடுத்துள்ளவற்றைக் கொஞ்சம் கெட்டியான பதத்தில் கலந்து வைக்கவும்.
  3. காளானைக் கழுவி நன்றாக துடைத்து விட்டு, பின்னர் அவற்றின் தண்டுகளை நீக்கி விட வேண்டும்.
  4. ஒவ்வொரு காளான் நடுவிலும் ஸ்டப்பிங் வைத்து அடைக்கவும்.
  5. 2 காளான்களை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஸ்டப்பிங் பக்கமாக சேர்த்து வைக்கவும். 2 காளான்களின் இரு ஓரங்களிலும் சேர்த்து டூத்பிக் சொருகவும். இப்படியே எல்லா காளான்களையும் இரண்டு இரண்டாக சேர்த்து சொருகி வைக்கவும்.
  6. ஒரு காளான் ஜோடி எடுத்து, அதை மாவில் முக்கி, பிரட் கிரம்ப்சில் போட்டு பிரட்டி வைக்கவும். இப்படியே எல்லா காளான் ஜோடிகளையும் செய்த பின்னர், அவற்றை பிரிட்ஜில் 1/2 முதல் 1 மணி நேரம் வரை வைக்கவும்.
  7. பின்னர், மிக சூடான எண்ணெயில் ஒவ்வொரு காளான் ஜோடியையும் போட்டு 5 விநாடிகளுக்குள் இரு பக்கங்களையும் பொரித்து எடுக்கவும். சிறிது அதிக நேரம் பொரித்தாலும் உள்ளே ஸ்டப்பிங் வைத்த சீஸ் உருக தொடங்கி விடும். எனவே கவனமாக செய்யவும்.
  8. அருமையான சீஸி காளான் ப்ரை தயார். காளான் வளரும் குழந்தைகளுக்கு பலவிதமான சத்துகளைக் கொடுக்க வல்லது. எனவே 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுத்து வரலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்