வீடு / சமையல் குறிப்பு / தஞ்சாவூர் டங்கர் பச்சடி(உளுந்து பச்சடி)

Photo of Tanjore Dangar Pachadi(Urad Dal Pachadi/Raita) by Ayesha Ziana at BetterButter
1988
3
0.0(0)
0

தஞ்சாவூர் டங்கர் பச்சடி(உளுந்து பச்சடி)

Nov-03-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தஞ்சாவூர் டங்கர் பச்சடி(உளுந்து பச்சடி) செய்முறை பற்றி

தஞ்சாவூர் மக்களின் பாரம்பரியமான, தற்போது அதிகம் புழக்கத்தில் இல்லாத, உளுத்தம்பருப்பு பச்சடி ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • விஸ்கிங்
  • ப்லெண்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை உளுத்தம்பருப்பு 3 ஸ்பூன்
  2. பாக்கெட் தயிர் 100 கிராம்
  3. மோர் 2 1/2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு தேவைக்கு
  5. எண்ணெய் தாளிக்க
  6. கடுகு 1 ஸ்பூன்
  7. சீரகம் 1/4 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை 1 கொத்து
  9. காய்ந்த மிளகாய் 1
  10. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து நன்றாக பொடிக்கவும். சற்று கரகரப்பாக விரும்புபவர்கள் அவ்வாறும் செய்யலாம்.
  2. ஒரு பவுலில் தயிரை ஊற்றி நன்றாக அடிக்கவும். பின்னர் அதனுடன் 3 ஸ்பூன் உளுந்து மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். மோரையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். விரும்பிய பதம் வந்ததும் மோரை நிறுத்திக் கொள்ளலாம்.(தண்ணீர் சேர்க்கவே கூடாது. இறுகிய கலவையை இளக வைக்க வேண்டுமானால் மோரை மட்டும் பயன்படுத்தவும்).
  3. ஒரு சிறிய பேனில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பின்னர் அதை தயிர் கலவையுடன் கொட்டவும்.
  4. நன்றாக கலந்து பரிமாறவும். சாதம், டிபன் போன்றவற்றிற்கு நல்ல காம்பினேஷன். இது தஞ்சாவூர் பகுதியின் பாரம்பரியமான, தற்போது அதிகம் பயன்பாட்டில் இல்லாத ரெசிபி ஆகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்