Photo of Kayalpattinam Ahani Biriyani by Ayesha Ziana at BetterButter
1470
6
0.0(1)
0

Kayalpattinam Ahani Biriyani

Oct-26-2017
Ayesha Ziana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி 1 1/4 கப்
  2. மட்டன் 1/2 கிலோ
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 1
  5. பச்சை மிளகாய் 4 முதல் 5
  6. இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
  7. தயிர் 150 கிராம்
  8. ஏலக்காய் 2
  9. கிராம்பு 3
  10. பட்டை சிறு துண்டு
  11. எலுமிச்சை பாதிக்கு சற்று குறைவாக
  12. மல்லித்தழை ஒரு கையளவு
  13. புதினா ஒரு கையளவு
  14. ரம்பை இலை/ பிரிஞ்சி இலை 1 பெரியது
  15. முந்திரி 20
  16. பாதாம் 20
  17. நெய் 1 1/2 டேபிள் ஸ்பூன்
  18. தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  19. உப்பு தேவைக்கு
  20. தண்ணீர் தேவைக்கு

வழிமுறைகள்

  1. குக்கரில் மட்டன், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 7 விசில் வேக வைக்கவும். பின்னர், மட்டனையும் வேக வைத்த தண்ணீரையும் தனித்தனியாக வைக்கவும்.
  2. அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. ஒரு சின்ன பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்ததும் பாதாமை சேர்த்து அடுப்பை அணைத்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் தோலுரித்து கொள்ளவும். மிக்ஸியில் இந்த பாதாமையும் முந்திரியையும் சேர்த்து மை போல அரைத்து கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, கிராம்பு பட்டை ஏலம், 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, பாதி மல்லி புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பின்னர் வெங்காயம், ரம்பை இலை, பச்சை மிளகாய், தக்காளி, மீதமுள்ள தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. வேக வைத்த மட்டன் துண்டுகள் சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  7. மட்டன் வேக வைத்த தண்ணீரையும் மேலும் சிறிது தண்ணீரும் சேர்க்கவும். இரண்டும் சேர்த்து அரிசியை விட 1 1/2 மடங்கு அதிகம் இருக்க வேண்டும்.
  8. பின்னர் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து, ஊற வைத்த அரிசியையும் சேர்த்து கலந்து மூடி வேக வைக்கவும்.
  9. தண்ணீர் கொஞ்சம் வற்றியதும், மீதமுள்ள மல்லித்தழை, புதினா சேர்த்து, தோசைக்கல்லின் மேல் இந்த கடாயை வைத்து மூடி, அதன் மேல் ஒரு கனமான பொருள் வைத்து, சிம்மில் 20-30 நிமிடம் தம் முறையில் வேக வைக்க வேண்டும்.
  10. அருமையான காயல்பட்டினம் ஸ்பெஷல் அஹனி பிரியாணி தயார். இது காயல்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரி சபீனா அவர்களின் குறிப்பைப் பின்பற்றி செய்யப்பட்டது.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nafeesa Buhary
Feb-05-2018
Nafeesa Buhary   Feb-05-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்