Photo of Pazhankanji-uppum puliyum by Ayesha Ziana at BetterButter
2142
3
0.0(1)
0

Pazhankanji-uppum puliyum

Oct-25-2017
Ayesha Ziana
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Pazhankanji-uppum puliyum செய்முறை பற்றி

தமிழகத்தின் பாரம்பரியமிக்க பழங்கஞ்சியும்(நீராகாரம்) உப்பும் புளியும்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பழங்கஞ்சி செய்ய: வடித்த சம்பா அரிசி சாதம் தேவையான அளவு
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. உப்பும் புளியும் செய்ய:
  5. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  6. சின்ன வெங்காயம் 5
  7. மோர் மிளகாய் வற்றல் 1
  8. வற்றல் மிளகாய் 1
  9. தேங்காய் எண்ணெய் 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கு
  11. தண்ணீர் தேவைக்கு

வழிமுறைகள்

  1. பழங்கஞ்சி செய்ய: சம்பா அரிசி சாதத்தை இரவு தண்ணீர் ஊற்றி வைத்தால் காலையில் பழங்கஞ்சியாக மாறி இருக்கும்.
  2. இதனுடன் உப்பு சேர்த்து கையால் நன்றாக பிசையவும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் சத்தான பாரம்பரியமான பழங்கஞ்சி தயார்.
  3. உப்பும் புளியும் செய்ய:
  4. முதலில் புளியை மூழ்கும் அளவு சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வைத்து, பின்னர் கரைத்து வடிகட்டி ஒரு பௌலில் ஊற்றவும்.
  5. இதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய மோர் மிளகாய், உப்பு சேர்த்து வைக்கவும்.
  6. வற்றல் மிளகாயை அடுப்பில் காட்டி சில நிமிடங்கள் சுட்டு எடுக்கவும். பின் இதையும் கசக்கி பவுலில் சேர்த்து, தேங்காய் எண்ணெயையும் ஊற்றி அத்தனையையும் நன்றாகப் பிசையவும்.
  7. அருமையான கார சாரமான உப்பும் புளியும் தயார். இதனுடன் பழங்கஞ்சி சேர்த்து சாப்பிடுவது பாரம்பரியப்பழக்கம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

Pure oldest recipe. Nicely elaborated the process. New generation won't prefer this dish. Verrrrrry tasty

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்