Search

Home / Women Health Tips in Tamil / நீங்கள் தவிர்க்காமல் கவனம் செலுத்த வேண்டிய, நுரையீரல் புற்றுநோய்க்கான ஐந்து அறிகுறிகள்

Lung cancer tamil cover

நீங்கள் தவிர்க்காமல் கவனம் செலுத்த வேண்டிய, நுரையீரல் புற்றுநோய்க்கான ஐந்து அறிகுறிகள்

Nithya Lakshmi | ஜூலை 6, 2018

புகைப்பழக்கும் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வரக்கூடும்.  உங்கள் உடலிலுள்ள அணுக்கள் சம நிலையில் இல்லாதிருப்பதே இதன் காரணம். உடலிலுள்ள அணுக்களின் செயல்பாடு தடைபடும்போது, கட்டியாக உருவாகிறது.  நுரையீரல்

புற்று நோய் தாக்கப்பட்டவர்கள், அதிகபட்சமாக  ஐந்து வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. அபாயாகரமான இந் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, இதற்கான அறிகுறிகள் தென்படும்போது முறையாக கவனிக்க வேண்டும்   

1) தொடர்ச்சியான இருமல்

இருமல் ஒரு சாதாரண விஷயம்தான் எனினும் அது தொடர்ச்சியாக வரும்போது அபாயமானது.  சுவாசத்தொற்று மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக, இருமல் உண்டாகிறது. ஆனால், தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு மேல் உலர் இருமலோ, சளியுடன் கூடிய இருமலோ இருந்தால், அது புற்று நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்,  உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.

 

2) சுவாசக் கோளாறு

 நுரையீரல் தொற்று, சுவாசப்பை கோளாறு மார்பகத்தில் திரவங்கள் சேர்தல் ஆகிய பல காரணங்களால், நமது சுவாசம் சீராக இன்றி தடைபடும்.   இதனை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக கவனித்தால்,   நுரையீரல் புற்று நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்   

 

3) உடலில் ஏற்படும் நிறமாற்றம்

 நுரையீரல் புற்று நோய்க்கான அறிகுறியை, தோலில் நிறமாற்றம் காட்டிக்கொடுத்துவிடும்.   தோள்பகுதி மற்றும் இடுப்புப்பகுதியில், சிவப்பாகவோ, இளம் ஊதா நிறத்திலோ, இரு புறத்திலும் தோல் நிறம் மாறினாலும், அதன் தொடர்ச்சியாக, கண்களின் அடிப்பகுதி, கைகள் மற்றும் கால்களிலும் நிற மாற்றம் ஏற்பட்டால், அது  நுரையீரல் புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்,. உடனடியாக, கவனித்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது அவசியம்

 

4) எலும்பில் வலி:

புற்று நோய் உண்டாக்கும் அணுக்கள் நுரையீரலிலிருந்து எலும்புகளுக்கு செல்லும்போது, அழுத்தம் அதிகரித்து, அதிக வலி உண்டாகும்.  தொடர்ச்சியாக, எலும்பில் வலி ஏற்பட்டால், குறிப்பாக இரவில் இந்த வலி அதிகமாக இருந்தால், அது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

 

5) இரத்தப்போக்கு:

உடலின் உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் இரத்தப்போக்கு, நுரையீரல் புற்று நோயுடன் சம்பந்தப்பட்டதாகும்.  தொற்றுக்களால் பாதிக்கப்பட்ட நுரையீரலில், திரவம் சேர்ந்துவிடுவதால், சுவாசத்தடை ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் சிரமப்படும்.  இரத்தப்புற்று நோய் காரணமாக நுரையீரலில் காற்று உட்புகுந்து, வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. அதனால், உங்கள் சிறு நீரிலோ, மலத்திலோ அல்லது இருமும்போதோ இரத்தம் கலந்து வந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.  

மூலப்படங்கள் ஃப்ளிக்கர், பிக்ஷியர் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட்து.

Nithya Lakshmi

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன