வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சுக்கா

Photo of Mutton Chukka by விருதை சமையல் at BetterButter
594
4
0.0(0)
0

மட்டன் சுக்கா

May-14-2018
விருதை சமையல்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சுக்கா செய்முறை பற்றி

மட்டன் சுக்கா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆட்டுக்கறி - 1/4 கிலோ
  2. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  4. சின்ன வெங்காயம் - 7 (பொடியாக நறுக்கியது)
  5. காய்ந்த மிளகாய் - 2
  6. கடுகு - 1/4 தேக்கரண்டி
  7. மிளகு - 1 தேக்கரண்டி
  8. சீரகம் - 1 தேக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஆட்டுக்கறியை நன்றாக சுத்தம் செய்து அதை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றைப் பொடித்துக் கொள்ளவும்.
  3. குக்கரில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு நறுக்கிய ஆட்டுக்கறி, மஞ்சள் பொடி ,ஒரு டம்ளர் தண்ணீர் , தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  4. ஐந்து விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.குக்கரின் ஆவி போனதும் குக்கரைத் திறக்கவும்.
  5. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்.  கடுகு வெடித்ததும் காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் ஆட்டுக்கறி கலவையை அதனுடன் சேர்க்கவும்.
  7. பின்பு அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து உப்பு சரிபார்த்து நன்கு கிளறவும்.
  8. அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்கவும். தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  9. சுவையான மட்டன் சுக்கா தயார்... இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றுடன் உண்ண மட்டன் சுக்கா அருமையாக இருக்கும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்