BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Sigappi (Authentic village style chicken gravy)

Photo of Sigappi (Authentic village style chicken gravy) by Umamaheswari Chellamuthu at BetterButter
0
2
5(1)
0

Sigappi (Authentic village style chicken gravy)

May-11-2018
Umamaheswari Chellamuthu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • దక్షిణ భారతీయ
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நாட்டுக்கோழி 1/2 கிலோ
  2. நல்லெண்ணெய்-1 அல்லது 2 ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் (முழுவதும் உறித்தது)
  4. இஞ்சி/பூண்டு விழுது -தலா 1ஸ்பூன்
  5. கருவேப்பிலை-2 கொத்து
  6. சோம்பு -1 ஸ்பூன்
  7. பட்டை-1துண்டு
  8. கிராம்பு ,ஏலக்காய் -4
  9. மிளகாய் தூள் -1ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
  11. தக்காளி -3 அல்லது 4
  12. தேங்காய் பால் -1கப்
  13. உப்பு -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சின்ன வெங்காயத்தை முழுதாக உறித்து கொள்ளவும்
  2. நாட்டுகோழியை நன்றாக மஞ்சள் பூசி கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்
  3. தக்காளி பழத்தை சுடுநீரில் போட்டு இரண்டு நிமிடம் வேக வைத்து தோலுரித்து அரைத்து வைத்து கொள்ளவும்
  4. ஒரு அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து பொறிய விடவும்
  5. அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பொறிய விடவும்
  6. அதில் முழுதான சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. கருவேப்பிலை சேர்க்கவும்
  8. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசணை போகும் வரை வதக்கவும்
  9. நாட்டுக்கோழி துண்டுகளை சேர்த்து ஒருசேர வதக்கி உப்பு சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
  10. அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்
  11. தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி சிறிது நீர் சேர்த்து பின் மூடி 20நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து சமைக்கவும்
  12. 20நிமிடம் கழித்து கோழி நன்கு வெந்ததும் பிழிந்து எடுத்த தேங்காய் பால் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை உடனே அணைத்து விடவும்
  13. கருவேப்பிலை தூவி இறக்கி பரிமாறலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
May-11-2018
Pushpa Taroor   May-11-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்