Photo of Instant Tirunelveli Halwa by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
862
7
0.0(3)
0

Instant Tirunelveli Halwa

May-05-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1 கப்
  2. ப்ரவுன் சுகர் - 1 1/2 முதல் 2 கப்
  3. நெய்-1/2 கப்
  4. முந்திரி -10

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் 5 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும்.
  3. பின்பு மாவு கரைசலை ஒரு வடிகட்டியால் இரண்டு முறை வடிகட்டி கொள்ளவும் .
  4. வடிகட்டும் போது கெட்டியான மாவு மேல்தங்கும்.அதை சேர்க்க தேவை இல்லை.
  5. இப்பொழுது அல்வா செய்வதற்கு கோதுமை மாவு பால் தயார்.
  6. ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் இதனை ஊற்றி நன்கு கிளறவும் .
  7. 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நன்கு கெட்டியாக வரும்.
  8. ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி ப்ரவுன் சுகர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சவும்.இப்பொழுது கேரமிளைஸ்டு பதத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.இது அல்வா கலருக்காக சேர்க்கவும்.புட் கலர் பிடித்தால் விரும்பி கலர் சேர்க்கலாம் .
  9. இப்பொழுது இதனை மாவு பால் கரைசலுடன் சேர்க்கவும்.
  10. ஊற்றிய பின்பு நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.40-45 நிமிடங்கள் கழித்து நன்கு கெட்டியாக வரும்.இப்பொழுது ப்ரவுன் சுகரை சேர்க்கவும்.
  11. சுகர் சேர்த்த பின்பு நன்கு கிளற வேண்டும்.அடிப்பிடிக்காமல் நன்கு கிளறவும் .இப்பொழுது கெட்டியாகி முட்டை முட்டையாக வரும்.
  12. பின்பு இதனுடன் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் .
  13. இப்பொழுது நன்கு கெட்டியாகி அல்வா பதத்திற்கு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
  14. ஒரு கடாய்யில் நெய் ஊற்றி முந்திரியை நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  15. வறுத்த முந்திரியை அல்வாவுடன் சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
  16. இப்பொழுது ஊற்றி நெய் பாத்திரத்திஒன் ஓரத்தில் நன்கு பிரிந்து வரும்.உடனே அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் மாற்றவும்.
  17. சுவையான இன்ஸ்டன்ட் திருநெல்வேலி அல்வா தயார்.மிதமான சூடில் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rahumath Nisha
May-08-2018
Rahumath Nisha   May-08-2018

Hameetha Banu
May-05-2018
Hameetha Banu   May-05-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்