வீடு / சமையல் குறிப்பு / ஆப்பச் சட்டியில் சுரைக்காய் உருண்டை

Photo of Lauki Kofta In Appe Pan by Sushmita Amol at BetterButter
5457
53
4.6(0)
0

ஆப்பச் சட்டியில் சுரைக்காய் உருண்டை

Mar-26-2016
Sushmita Amol
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நடுத்தர அளவுள்ள சுரைக்காய்: 1 துருவப்பட்டு தண்ணீர் பிழியப்பட்டது
  2. கடலை மாவு :1/2 கப்
  3. பச்சை மிளகாய்: 1-2
  4. மல்லித்தூள்: 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய்ப்பொடி: ஃ/1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா: 1/2 தேக்கரண்டி
  7. கொத்துமல்லி இலைகள்: 1 தேக்கரண்டி நன்றாக நறுக்கப்பட்டது
  8. சீரகத்தூள், மாங்காய்ப்பொடியும் கூட கூடுதல் சுவைக்காகச் சேர்க்கலாம்

வழிமுறைகள்

  1. சுரைக்காயைத் தோலுரித்துக்கொள்ளவும். துருவிக்கொள்ளவும். பிழிந்து கூடுதல் தண்ணீரை நீக்கவும். தண்ணீர் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பதால் குழம்பில் பின்னர் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  2. பிழிந்தத் தண்ணீரை உடனடியாகப் பயன்படுத்துவது நல்லது. அதனால் நான் வெங்காயம்- தக்காளி குழம்பை முன்னரை தயாரித்தேன்.
  3. ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில், சுரைக்காயை அனைத்து மசாலாக்களுடன் கலக்கவும். கடலை மாவு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். மாவின் பதத்தினைச் சரிபார்க்கவும். அதிகக் கடலை மாவு தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி சேர்க்கலாம்.
  4. இறுதியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
  5. ஆப்பச் சட்டியில் சூடுபடுத்திக்கொள்ளவும். ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் விடவும். ஒவ்வொரு பணியாறக் குழியிலும் ஒரு தேக்கரண்டி மாவு ஊற்றவும்.
  6. மாவின் மீது கொஞ்சம் எண்ணெய் தெளித்து மூடி 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. 2 நிமிடங்களுக்குப் பிறகு திருப்பிப்போட்டு அடுத்தப் பக்கத்தை வேகவைக்கவும். 3-4 முறை திருப்பிப்போட்டு நன்றாக பொன்னிறமாகும்வரையில் வேகும் வரையில் வேகவைக்கவும்.
  8. ஒட்டுமொத்த செயல்பாடும் சமமாக கோஃப்டா வேகுவதற்கு 6-8 நிமிடங்கள் ஆகும். எப்போதும் சிறு தீயில் இருக்கவேண்டும். நடுத்தரத் தீயில் வேகவைத்தால் கோஃப்தா உள்ளே வேகாது!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்