Photo of Garlic Pickle by Ummu Mymoona at BetterButter
442
5
0.0(1)
0

Garlic Pickle

Feb-06-2018
Ummu Mymoona
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆந்திரப்ரதேஷ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறிய பல் பூண்டு - 200 கிராம்
  2. புளி - 2 பெறிய எலுமிச்சை அளவு
  3. தண்ணீர் - 200 மில்லி
  4. கடுகு - 3 தேக்கரண்டி
  5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  6. சீரகம் - 1 தேக்கரண்டி
  7. வத்தல் பொடி - 3 மேசைக்கரண்டி
  8. உப்பு - தேவைக்கு
  9. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. புளியில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக சாறு எடுக்கவும்..
  2. 200 கிராம் பூண்டை தோல் நீக்கி விட்டு அதில் 50 கிராம் பூண்டை தனியாக எடுத்து மை போல் அரைக்கவும்..
  3. வெந்தயம், 1 தேக்கரண்டி கடுகு, சீரகம் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக்கவும்.. சீரகம் சட்டென்று வறுபட்டு விடும் என்பதால் வறுக்கும் போது சீரகத்தை இறுதியாக சேர்க்க வேண்டும்.. இல்லையேல் சீரகம் கறுத்துவிட்டு ஊறுகாய் கறுத்து விடும்..
  4. கடாயில் எண்ணெய் விட்டு மீதமுள்ள கடுகை போட்டு தாளித்து கொள்ளவும்..
  5. பின்பு 150 கிராம் பூண்டை சேர்த்து இலேசான பொந்நிறம் வறும் வரை வறுக்கவும்..
  6. பின்பு புளி, பூண்டு சாற்றை சேர்த்து எண்ணெய் தெளிந்து வறும் வரை கிளறி கொள்ளவும் ( ஏறத்தாழ 20 நிமிடம் எடுக்கும்)
  7. இப்பொழுது வத்தல் பொடி, வறுத்தரைத்த பொடி, உப்பு சேர்த்து 10 நிமிடம் தம்மில் வைக்கவும்.. வத்தல் பொடி காரத்தின் விருப்பத்திற்கேற்ப கூட்டியோ, குறைத்தோ கொள்ளலாம்.
  8. நல்ல மணமுடன் எண்ணெய் தெளிந்து வறும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும்.. சுவையான பூண்டு ஊறுகாய் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Feb-06-2018
BetterButter Editorial   Feb-06-2018

Hi Ummu, your recipe is currently hidden from public view as it is written in English text. Unfortunately, we are not allowing recipes in 'English Script' for our Tamil Contests. Currently, we have hidden this recipe from public view, please make the change. Kindly ensure that from now on, you kindly submit your recipes in Tamil for our Tamil contests. To enter your recipe in our Tamil contests, please switch to Tamil in the app or website and submit your entry in the Tamil script. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்