வீடு / சமையல் குறிப்பு / Chettinaad salt mutton gravy (lamp)

Photo of Chettinaad salt mutton gravy (lamp) by Adaikkammai Annamalai at BetterButter
560
6
0.0(1)
0

Chettinaad salt mutton gravy (lamp)

Jan-01-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எண்ணெய் - 4 ஸ்பூன்
  2. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  3. உளுந்து - 1/2 ஸ்பூன்
  4. சோம்பு - 1/2 ஸ்பூன்
  5. வெங்காயம் - 2
  6. தக்காளி - 2 சின்னமாக இருந்தால்... பெருசுனா 1 போதும்
  7. கொத்தமல்லி - தேவையான அளவு
  8. மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
  9. மட்டன் - 500 gm
  10. உப்பு - தேவையான அளவு
  11. தயிர் - 2 ஸ்பூன்
  12. அரைத்து எடுக்கவேண்டிய பொருட்கள்
  13. வரமிளகாய் - 7
  14. காய்ந்த மல்லி (coriander seed) - 2 spoon
  15. சோம்பு - 2 ஸ்பூன்
  16. முந்திரி - 2
  17. இஞ்சி - சிறு துண்டு
  18. இவைகளை அரைத்து ஏசுது கொள்ளவேண்டும்...

வழிமுறைகள்

  1. முதலில் கறியை நன்றாக அலசி மஞ்சத்தூள் உப்பு, இஞ்சி, பூண்டு, தட்டி போட்டு உரசி கழுவி சுத்தம் செய்து எடுத்துகொள்ளவும்.
  2. அதன் பின் அரைக்க வேண்டிய பொருளை அரைத்து எடுத்து கொள்ளவும்.
  3. கறி சீக்கிரமாக வேகாது அதனால் குக்கரில் வதக்கி சேர்த்து வேக வைக்க வேண்டும்
  4. எனவே குக்கரில் எண்ணையை காய வைக்கவும். வெந்தயம் , உளுந்து. சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  5. பொறிந்தவுடன் வெங்காயம,. தக்காளி, உப்பு போட்டு வதக்கவும்.
  6. அதனுடன் மஞ்சத்தூள் 1 ஸ்பூன், கொத்தமல்லி சிறிது , இஞ்சி பேஸ்ட் 1 ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  7. அதன் பின் தேவையான அளவு காரத்திற்கு ஏற்றார் போல் அரைத்து வைத்த மசலாவில் இருந்து 3 அல்லது 4 ஸ்பூன் சேர்த்து வதக்கவும்
  8. நன்றாக வதங்கிய பின் கறியை போட்டு நன்றாக 10 நிமிடம் வதக்கவும்.
  9. வதங்கிய பின் தயிர் சேர்க்கவும் .
  10. அனைத்தையும் நன்றாக கிளறி 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும். 4 சவுண்ட் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
  11. வெந்த பின் அடுப்பை ஆன் செய்து கிளறி இறக்கவும்.
  12. சுவையான செட்டிநாடு உப்பு கரி கிரேவி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-01-2018
Pushpa Taroor   Jan-01-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்