340
4
0.0(1)
0

Bittergourd gravy

Dec-20-2017
Afrah Fathima
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாகற்காய் 375கி
  2. புளி 75கி
  3. தக்காளி 1/4 கி
  4. தேங்காய் 1 மூடி
  5. சின்ன வெங்காயம் 125கி
  6. மீன் குழம்பு மசாலா 5tsp
  7. எண்ணெய் 2மேஜைக்கரண்டி
  8. கடுகு 1/2 tsp
  9. கருவேப்பிலை 2 கொத்து
  10. வரமிளகாய் 4
  11. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. பாகற்காயை கழுவி தேவையான வடிவத்தில் வெட்டவும்
  2. புளியை கரைத்து வைக்கவும்
  3. தேங்காயை நைசாக அரைக்கவும்
  4. சின்ன வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும்
  6. கடுகு வெடித்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்
  7. சின்ன வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  8. வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்
  9. தக்காளி நன்கு வதங்கியதும் மீன் குழம்பு மசாலாபொடி சேர்த்து வதக்கவும்
  10. பச்சை வாசம் போனதும் பாகற்காய் சேர்த்து வதக்கவும்
  11. பாகற்காய் அரைபதம் வதங்கியதும் உப்பு,புளி கரைசல் தேவையான அளவு நீர் ஊற்றி மூடி வைக்கவும்
  12. நன்கு கொதித்து பாகற்காய் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 கொதி வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Shelly Sharma
Dec-27-2017
Shelly Sharma   Dec-27-2017

Would love to see an image of this.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்