வீடு / சமையல் குறிப்பு / Pineapple mini cake with chocolate Ganash frosting

Photo of Pineapple mini cake with chocolate Ganash frosting by Juvaireya R at BetterButter
710
4
0.0(2)
0

Pineapple mini cake with chocolate Ganash frosting

Dec-10-2017
Juvaireya R
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Pineapple mini cake with chocolate Ganash frosting செய்முறை பற்றி

மிகவும் அருமையான மற்றும் சுவையான மினி கேக்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • விஸ்கிங்
  • பேக்கிங்
  • மைக்ரோவேவிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. முட்டை 8 (வெள்ளை, மஞ்சள் தனியே)
  2. 240 கிராம் மைதா மாவு
  3. 240 கிராம் சர்க்கரை (பொடித்தது)
  4. 1/2 தேக்கரண்டி கீரீம் ஆப் டாட்டர்/எலும்மிச்சை சாறு
  5. சாக்லெட் சிப்ஸ் 100 கிராம்
  6. பைனாப்பிள் எஸ்ஸெனஸ் 2 தேக்கரண்டி
  7. டார்க் காம்போண்டு சாக்லேட் 500 கிராம்
  8. ப்ரெஷ் கீரீம் - 250 கிராம்
  9. பால் 60 மி.லி
  10. எண்ணெய் 60 மி.லி

வழிமுறைகள்

  1. ப்ரெஷ் கீரீமை பாத்திரத்தில் ஊற்றவும்
  2. பின் டபுள் பாயிலர் முறையில் கொதிக்க விடவும்.
  3. க்ரீம் கொதித்ததும் சாக்லெட்டை போடவும்.
  4. பின் நன்கு கலக்கவும்.
  5. பின் அதனை மூடி 5 மணி நேரம் வைக்கவும்.
  6. அதற்குள் பைனாப்பிள் மினி கேகக் செய்வோம்.
  7. முட்டடை வெள்ளை கருவினை பாத்திரத்தில் ஊற்றி அதில் கீரீம் ஆப் டாட்டர் சேர்க்கவும்.
  8. அதனை பீட்டரால் அடிக்கவும். சிறிது நுரைவந்ததும். சிறிது சிறிதாக சர்க்கரை சேர்க்கவும்.
  9. ஐஸ்கிரீம் போன்ற பதத்திற்க்கு வந்ததும் பீட்டரை ஆப் செய்யவும்.
  10. பின் மஞ்சள் கருவை அதில் சேரத்து கலக்கவும்.(ஸ்பெட்சுலா உதவியுடன்)
  11. பைனாப்பிள் எஸ்ஸென்ஸ் சேர்த்து கலக்கவும்.
  12. அக்கலவையில் பால் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  13. பின் அக்கலவையை நன்கு ஸ்பேட்சுலாவால் கலந்து.பின் சிறிது சிறிதாக மாவை சேர்த்து கலக்கவும்.
  14. நன்கு கட்டி இல்லாமல் கலக்கவும்.
  15. நான் சில்வர் பாயில் கப்பை பயன்படுத்தினென்.( கன்வெக் ஷன் மோடில்)
  16. பாதி அளவிற்க்கு கேக்கலவையை ஊற்றி அதன் மேல் சாக்லெட் சிப்ஸை தூவவும்.
  17. 160 டிகிரி செல்சியசில் சூடேற்றப்பட்ட மைக்ரோவேவ்ஓவனில் 30-35 நிமிடம் வேகவைக்கவும்.
  18. மிக அழகான மற்றும் பஞ்சுபோல கேகக் தயார்.
  19. நாம் முன்னே செய்து வைத்த சாக்லெட் கானாஷை பீட்டரால் 2-3 நிமிடம் அடிக்கவும்.
  20. அதனை பைப்பிங் பேக்கில் போடவும்.மற்றும் விருப்பமான நாஸிலை பயன்படுத்திக்கொள்ளவும்.
  21. பின் கப்கேக் மேல் அழங்கரிக்கவும்.
  22. விருப்பம் போல் அழங்கரிக்கவும்.
  23. அழகான மற்றும் சுவையான பைனாப்பிள் மினி கேக் தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-12-2017
Vasuyavana   Dec-12-2017

Yummy

Priscilla Vijay
Dec-11-2017
Priscilla Vijay   Dec-11-2017

Wow

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்