வீடு / சமையல் குறிப்பு / தவா பூண்டு வெண்ணெய் நான்

Photo of Tawa Garlic  Butter Naan by Moumita Malla at BetterButter
3352
698
4.4(0)
0

தவா பூண்டு வெண்ணெய் நான்

Jan-20-2016
Moumita Malla
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத
  • லோ கொலஸ்ட்ரால்
  • டயாபடீஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாவு - 2 கப் + 2 தேக்கரண்டி (துவலுக்கு)
  2. வெதுவெதுப்பான தண்ணீர் - 1/2 கப் + மாவு பிசைவதற்கு
  3. ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
  4. சர்க்கரை - 1 தேக்கரண்டி
  5. தயிர் - 2 தேக்கரண்டி
  6. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  7. கருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  8. கொத்துமல்லி - 1/4 கப் (நறுக்கியது)
  9. பூண்டு - 1/4 கப் (நறுக்கியது)
  10. வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  11. உப்பு - சுவைக்கேற்றபடி

வழிமுறைகள்

  1. 1 தேக்கரண்டி ஈஸ்ட் 1 தேக்கரண்டி சர்க்கரையை 1/2 கப் வெதுவெதுப்பான நீரில் சேர்க்கவும்.
  2. நன்றாகக் கலந்து 10 நிமிடங்களுக்கு வைக்கவும்
  3. ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில், 2 கப் மாவு ஒரு சிட்டிகை உப்பு எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும், ஈஸ்ட் கலவை, தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. மாவுக் கலவையை உங்கள் கைகளால் பிசைந்துகொள்ளவும், பிசையும் போது தேவைப்பட்டால் அதிகமாக வெந்நீர் சேர்த்துக்கொள்ளவும்.
  5. இப்போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் பிசைந்துகொள்ளவும்.
  6. நான் மாவை ஈரமான சமையல் துண்டால் மூடி வெப்பமான இடத்தில் 1ல் இருந்து 1.5 மணி நேரம் வைக்கவும். ஈஸ்ட் வினைபுரிய ஆரம்பித்ததும் மாவு இரட்டிப்பாகிவிடும்.
  7. 1 மணி நேரத்திற்குப் பிறகு, கொஞ்சம் மாவை பிசைந்த மாவின் மீது தெளித்து 1 நிமிடம் பிசையவும். இப்போது நான் மாவை தோராயமாக சம அளவுள்ள உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.
  8. பூண்டு, கருஞ்சீரகம், கொத்துமல்லியை ஒரு பாத்திரத்தில் மேலே வைப்பதற்குக் கலந்துகொள்ளவும்.
  9. தவாவை அடுப்பில் வைத்து உயர் தீயில் தவாவை சூடுபடுத்தவும்.
  10. ஒரு சமதளப் பரப்பில் ஒவ்வொரு உருண்டையையும் எடுத்துக்கொள்ளவும். நீங்கள் சமையல் மேடையை அல்லது உருட்டுப் பலகையைப் பயன்படுத்தலாம். (தேவைப்பட்டால் மாவைத் தெளித்துக்கொள்ளவும்), அருமையான வடிவத்தில் மாவை உருட்டிக்கொள்ளவும்.
  11. 1 தேக்கரண்டி பூண்டு, கொத்துமல்லி, கருஞ்சீரகக் கலவையை எடுத்து நானின் ஒரு பக்கத்தில் பரப்பவும்.
  12. உருட்டைக் கட்டையால் ஒரு முறை உருட்டி அனைத்துச் சேர்வைப் பொருள்களையும் உருட்டவும்.
  13. நானைத் திருப்பிப்போட்டு, கைகளால் கொஞ்சம் தண்ணீர் இடவும்.
  14. நானை சூடானத் தவாவில் ஈரப்பகுதி கீழாகவும் பூண்டுப்பகுதி மேலாகவும் வைக்கவும். கைகளால் அல்லது கரண்டியால் தவாவில் ஒட்டும் அளவிற்கு அழுத்தவும். சில நொடிகள் அல்லது குமிழ்கள் நானில் தோன்றும்வரை சமைக்கவும். நான் தவாவில் ஒட்டிக்கொள்ளும்.
  15. நானை வைத்து தண்ணீர் பக்கத்தில் சூடான தவாவில் ஒட்டவைக்கவும். சில நொடிகள் நான் வேகட்டும்.
  16. தவாவைத் தலைகீழாக தீயில் திருப்பி தவாவைக் கவனமாகத் தீயில் நகர்த்தவும் நானில் பொன்னிறப் புள்ளிகள் தோன்றும்வரை.
  17. பூண்டு நானை ஒரு கரண்டியால் எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து கொஞ்சம் வெண்ணெய் விடவும். மீதமுள்ள நான் உருண்டைகளை மேல் கூறிய வழிமுறையில் செய்யவும்.
  18. பரிமாறி மகிழவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்