வீடு / சமையல் குறிப்பு / பிரெட் பகோடா

Photo of Bread Pakora by Salma Godil at BetterButter
67296
980
4.4(0)
7

பிரெட் பகோடா

Sep-01-2015
Salma Godil
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • இந்திய
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு பூரணம்: 4-5 துண்டுகள் வேகவைத்த உருளைக்கிழங்கு
  2. 1 துண்டு பச்சை மிளகாய்
  3. 3 தேக்கரண்டி நறுக்கிய கொத்துமல்லி
  4. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  5. 1 தேக்கரண்டி மாங்காய்த் தூள்
  6. 1 கப் புதினா-கொத்துமல்லி பச்சை சட்னி (விருப்பம் சார்ந்தது)
  7. 1 தேக்கரண்டி உப்பு
  8. கடலை மாவு: 2 கப்
  9. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  10. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  11. 1 தேக்கரண்டி ஓமம்
  12. மாவைக் கலப்பதற்குத் தண்ணீர்
  13. சுவைக்கேற்ற உப்பு
  14. பொரிப்பதற்கு எண்ணெய்
  15. 6 பிரெட் துண்டுகள்
  16. ஒரு சிட்டிகை பெருங்காயம்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு பூரணம்: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து சூடாக இருக்கும்போதே மசித்துக்கொள்க. மசித்த உருளைக்கிழங்கில் கொத்துமல்லி சேர்த்துக் கலந்து பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய்த் தூள், மாங்காய்த் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  2. கடலை மாவிற்கு: கடலை மாவில் ஓமம், சிவப்பு மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், பெருங்காயம், உப்பு அகியவற்றைச் சேர்க்கவும். தேவையான பதத்திற்குத் தண்ணீர் சேர்த்து உப்புக் காரம் சரிபார்க்கவும். மாவில் சில துளிகள் எண்ணெய் விட்டு எடுத்து வைக்கவும்.
  3. பிரெட் பகோடாவை ஒருங்கிணைப்பதற்கு: பிரெட்டை முக்கோண துண்டுகளாக வெட்டி, ஒரு பக்கத்தில் சட்னியைத் தடவி மசித்த உருளைக் கிழங்கைச் சமமாகத் பரப்பி இன்னொரு பிரெட் துண்டால் மூடவும்.
  4. கடலை மாவில் தொய்த்து பிரெட்டை நனைக்கவும். சூடான எண்ணெயில் மிதமானச் சூட்டில் முறுமுறுப்பாகவும் பொன்னிறமாகவும் பகோடாவைப் பொரிக்கவும். டீ அல்லது காபியுடன் மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்