வீடு / சமையல் குறிப்பு / Multi Color Chapati And Paneer Butter Masala !

Photo of Multi Color Chapati And Paneer Butter Masala ! by Ramani Thiagarajan at BetterButter
639
2
0.0(1)
0

Multi Color Chapati And Paneer Butter Masala !

Aug-28-2018
Ramani Thiagarajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பல வண்ண சப்பாத்தி ! தேவையான பொருட்கள் : கோதுமை மாவு 1/2 டம்ளர் மைதா மாவு 1/2 “ பாலக் கீரை அரைத்தது ( சுடு தண்ணீரில் போட்டு எடுத்து அரைக்கவும் ) கேரட் அரைத்தது சிரிதளவு பீட்ரூட் அரைத்தது சிறிதளவு
  2. சீரகத்தூள் 1 தேக்கரண்டி , மிளகாய்தூள் 1 “ “ உப்பு தேவையான அளவு கரம் மசாலாதூள் 1 தேக்கரண்டி
  3. பச்சை மிளகாய் அரைத்தது சிறிதளவு. விரும்பிய எண்ணெய் நெய்
  4. பன்னீர் பட்டர் மசாலா: இஞ்சி,பூண்டு விழுது 1 தேகரண்டி வெங்காயம் 1 தக்காளி விழுது 2 தேகரண்டி தக்காளி சாஸ் 2 தேகரண்டி முந்திரி ஊறவைத்து அரைத்தது 4 தேக்கரண்டி தனியா தூள் 1 தேகரண்டி மிளகாய் தூள் 3/4 தேகரண்டி கரம்மசாலா 1/2 தேகரண்டி கஸ்தூரி மேதி தூள் 3/4 தேகரண்டி தேங்காய் பால் 1கப் வெண்ணைய் 100கிராம் பன்னீர் 200கிராம் உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. செய்முறை : மாவுகளுடன் உப்பு, கரம் மசாலா, சீரகதூள் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். மாவை 3 பாக௩்களாக பிரித்துக் கொள்ளவும். ஒரு பகுதியில் பச்சைமிளகாய் அரைத்த விழுது, கீரை விழுது சேர்த்து சப்பாத்தி மாவு தயாரிக்கவும்.
  2. ஒரு பகுதியில் மிளகாய்தூள், பீட்ரூட் விழுது சேர்த்து பிசையவும். ஒரு பகுதியில் கேரட் விழுது சேர்த்து பிசையவும்.
  3. 3 வண்ண சப்பாத்தி மாவில் இருந்து சிரிது மாவை எடுத்து நீள வாக்கில் சிலிண்டர் போல்உருட்டிக் கொள்ள வேண்டும்.
  4. மூன்று வண்ண சிலிண்டர் வடிவில் உள்ள மாவை ஒன்றாக உருட்டவும். பிறகு வட்டவடிவில் சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  5. சப்பாத்திகளாக திரட்டி நேய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் வெண்ணைய்ச் சேர்க்கவும். வெண்ணைய் ஊறுகியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து 1/2நிமிடம் வதக்கவும்.
  7. அதன் பின் பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயத்தைச் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி விழுது,தக்காளி சாஸ்,தணியா தூள்,மிளகாய் தூள்,கரம்மசாலா ,கஸ்தூரி மேதி தூள் இவை அனைத்தையும் வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து 3நிமிடம் வதக்கவும்.
  8. அதன் பின் உப்பு,இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கிரேவிப் போல் வந்ததும் பன்னீர் சேர்த்து 2நிமிடம் கொதிக்கவிடவும்.பிறகு முதல் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதிவந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கி வைக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ramani Thiagarajan
Aug-30-2018
Ramani Thiagarajan   Aug-30-2018

மிகவும் சுவையான உணவு. பள்ளிக்கூடங்கள்,வேலை செய்யும் இடங்களுக்கு டிபன் பாக்ஸில் எடுத்து செல்ல வசதியாகவும்,சுவையாகவும் இருக்கும் உணவு.கீரை,கேரட் மேலும் பீட்ரூட் போன்ற காய்கள் சேர்ந்து உள்ளதால் ஆரோக்கியமான உணவு.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்